உயரப்போகும் மின் கட்டணம்! வெளியான முக்கிய தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு மூன்றாவது கட்டண திருத்தத்தைக் கோரிக்கையாக விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணம்
இந்நிலையில், தற்போது நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண உயர்வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச்செலவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது மின்சார சபைக்கான நிதிச்செலவுகள் 2.48 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்கள் கருத்துக்களை கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri