தியாக தீபம் திலீபனின் ஆவணக் காப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்ட றஜீவன் எம்.பி
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் விஜயம் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ். நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் நேற்று(20) மாலை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக ” எனும் தொனிப்பொருளுடன் இந்த ஆவணக் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆவணக் காட்சியகம்
ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













