மர்மங்கள் நிறைந்த மனம்பேரியின் தொலைபேசி... வெளியாகவுள்ள இரகசியங்கள்!
சமீபத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் பிரமுகரான சம்பத் மனம்பேரி, விசாரணையில் பொலிஸாரை தவறாக வழிநடத்துவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பேருந்து தரிப்பிடங்களில் தான் உறங்குவதாகவும் அங்கு தனது கையடக்கத் தொலைபேசி தொலைந்து விட்டதாகவும் மனம்பேரி விசாரணையின் போது கூறியுள்ளார்.
இதன்படி, புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இரவில் அவர் உறங்கினாரா என்பதை கண்டறிய பொலிஸார் சிசிடிவி கமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
எனினும், மனம்பேரியின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டால் பலர் தொடர்பான இரகசியத் தகவல்கள் வெளிவரும் என்பதாலேயே அவர் இவ்வாறு கூறுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், இதுவரை விசாரணையில் அவர் கூறிய தகவல்களின் படி, போதைப்பொருள் குற்றங்கள் குறித்த பல இரகசிய விவரங்கள் எதிர்காலத்தில் வெளியாகக்கூடும் என பொலிஸார் கூறியுள்ளார்.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட கும்பல் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையில் போதைப்பொருள் குறைந்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



