சொத்து விபரங்களை வெளியிடாத முக்கியஸ்தர்கள்!
41 அதிகாரிகள், கடந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 41 அதிகாரிகளில், முன்னாள் அமைச்சரவை அமைச்சர், பல ஆளுநர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தூதர்கள், மூத்த இராஜதந்திர ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவை கோடிட்டு இந்த செய்தியை ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்காதவர்களின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, முன்னாள் அமைச்சர் ஒருவர், ஆறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு முன்னாள் ஆளுநர்களும் இந்த பொறுப்பிலிருந்து தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்களை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam