கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர் - குழு மோதலால் ஏற்பட்ட விபரீதம்
கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.