எயார் பஸ் வழக்கு குறித்த இரகசியத்தை அம்பலப்படுத்திய கம்மன்பில
எயார்பஸ் வழக்கைத் தொடங்கியவர்களே ராஜபக்ச குடும்பத்தினர் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் நிறுவனத்தினால் தங்களது விமானங்களை விற்பனை செய்வதற்காக உலகின் பல நாடுகளுக்கு கையூட்டல் வழங்கிய விவகாரம் தொடர்பில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எயார்பஸ் விவகாரம் தொடர்பில் முதல் முதலில் வழக்கு தொடர்ந்தது ராஜபக்ச ஆட்சியில் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவுடன் கொடுக்கல் வாங்கல் நடைபெற்ற போது ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்ய அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் நாமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக கடமை ஆற்றியதுடன் அவருடைய சிறிய தந்தை நாட்டின் ஜனாதிபதியாகவும் அவரது தந்தை நாட்டின் பிரதமராகவும் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சராக அவரது பெரிய பாவம் கடமையாற்றினர் என தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தின் விமானங்களை விற்பனை செய்வதற்காக விமான சேவை நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளுக்கு எயார்பஸ் நிறுவனம் கையூட்டல் வழங்கிய விவகாரம் 2020 ஆம் ஆண்டு முதல் முதலில் அம்பலமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
கானா விமான படையினருக்கு, மலேசியாவின் எயார் ஏசியா நிறுவனத்திற்கு, தாய்வான் டிரான் ஏசியா விமான சேவை நிறுவனத்திற்கு இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியாவின் சிற்றிலிங்க் ஆகிய விமான சேவையை நிறுவனங்களுக்கு நிறுவனங்களின் பிரதான அதிகாரிகளுக்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கையூட்டல் வழங்கியதாக நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
எந்த விசாரணைகள் ஆரம்பமானது ஆரம்பமானவுடன் எந்தெந்த நிறுவனங்களின் எந்தெந்த அதிகாரிகளுக்கு தாங்கள் கையூட்டல் வழங்கியதாக எயார்பஸ் நிறுவனம் தன்னார்வ அடிப்படையில் கூறி விசாரணைகளை நிறுத்துமாறு கோரி இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளை நடத்திய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு 3.9 பில்லியன் டொலர் நட்டஈடாக வழங்கியிருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்திய பிரித்தானியாவின் பாரதூர குற்ற செயல்களுக்கு பொறுப்பான நிறுவனம் இலங்கையிலும் இந்த மோசடி இடம் பெற்றதாக அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியாகிய ஆகியோரை கைது செய்து விளக்க மறியலில் வைக்க அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருந்தது.
அப்போதே அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சே கடமையாற்றினார் என தெரிவித்துள்ளார்.