இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் மத்திய உயர் நிலப்பகுதிகளில் கனமழை காலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் சிரேஷ்டப் பேராசிரியர் அதுல செனரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
கனமழைக்கு பின்னர் நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள பாறை அடுக்குகளில் கடுமையான அழுத்தம் ஏற்படுகின்றது. இவை இலங்கைக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இதன் காரணமாக, பாறை அடுக்குகளில் பிளவுகள் ஏற்பட்டு அந்த பிளவுகளில் சிறிய அசைவுகள் ஏற்படுகின்றன. இந்த சிறிய அசைவுகளினால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த 5-6 ஆண்டுகளாக மத்திய மலைப்பகுதிகளில் அவற்றை பதிவு செய்து வரும் நிலையில், இலங்கையில் மேலும் நில அதிர்வுமானிகளை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆபத்து
தற்போது மத்திய மலைப்பகுதிகளில் 13-14 நில அதிர்வுமானிகள் மாத்திரமே நிறுவப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மாத்திரமே நாட்டை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தோனேசியாவின் அந்தமான் தீவுகளின் ஆழமற்ற கடற்பரப்பிற்கு அருகில் அதிர்வு ஏற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு ஆபத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியல் களத்திலிருந்து விலகும் ராஜபக்சர்களின் வாரிசுகள்! ஒன்பது பிரிவுகளாக பிரிந்துள்ள ராஜபக்ச குடும்பம்
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri