வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் துயரம் - பட்டாசினால் உயிரிழந்த பதின்ம வயது இளைஞன்
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பிரதேசத்தில் பிரித் நிகழ்வொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டில் பட்டாசுகளை கொளுத்த சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டாசுகளை கொளுத்த முயன்ற போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டிய, கெப்பிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரோஷ் தினுஜய ஜயசேகர என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவன் மரணம்
இவர் வீரகெட்டிய தேசிய பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் என தெரியவந்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த அவர், காலி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியப் பிரிவில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்றது.
பொலிஸார் விாரணை
உறவினர் வீட்டுப் பிரித் நிகழ்விற்காக இரோஷ் சொந்த விருப்பத்தின் பேரில் பணம் கொடுத்து பட்டாசுகளை வாங்கி வந்ததாகவும், மாலையில் வீட்டிற்கு முன்னால் சுமார் இரண்டு அடி இடைவெளியில் குழிகள் தோண்டி அவற்றை பொருத்தியுள்ளார்.

பிரித் நிகழ்வு ஆரம்பிக்கும் போது இரோஷ் அவற்றைக் கொளுத்தியதாகவும், மற்றவை வெடித்த நிலையில் ஐந்தாவது பட்டாசு வெடிக்காததால், அருகில் சென்று அதன் திரியை பரிசோதித்த போது திடீரென வெடித்துள்ளது.
இரோஷின் முகத்தில் தாக்கியதில் அவர் கீழே விழுந்து முகத்தில் தீக்காயங்களுக்குள்ளானதாக உயிரிழந்தவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri