பிள்ளையானின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்.. திசைதிருப்பப்படுகின்றதா விசாரணை!
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றுவரையிலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தற்போது வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிள்ளையான் சிறையில் இருந்து வழங்கிய வாக்குமூலத்திற்கு பின்னர் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் பல உயிர்கள் கொல்லப்பட்டன. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஒன்றான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடித்த சத்தம் கேட்டதும் பிள்ளையான மேற்கொண்ட செயல் குறித்தும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே பிள்ளையான சிறையில் இருந்து கொடுத்த வாக்குமூலமும் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணை கோணத்தை திசைதிருப்பும் செயற்பாடாக ஒருவேளை இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



