ரோஹண பண்டாரவுக்கு பாதுகாப்பு வேண்டும்! - சபையில் சஜித் அவசர கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
அவர், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான சிறப்புரிமை தொடர்பில் ஒரு பிரச்சினையை முன்வைத்தார்.
பின்னர், அது தொடர்பாக அரசு கவனம் செலுத்தாத போது தொடர்ந்து கேள்விகள் கேட்பது எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
ரோஹண பண்டார எம்.பிக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படாமையினால் அது தொடர்பாக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, அனுராதபுரம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி ரோஹண பண்டார எம்.பிக்கு உரிய பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இவை உட்கட்சிப் பிரச்சினைகள் என்று கூறி இப்பிரச்சினையை வேறு பக்கத்துக்குத் திசை திருப்ப அரசு முயற்சிக்கின்றது என்றும், அவருடன் எந்தவொரு கட்சிப் பிரச்சினையும் இல்லை என்றபடியால், அவருக்கு உரிய பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.