யாழ். புங்குடுதீவில் மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்.. தீவிர தேடுதலில் பொலிஸார்
புங்குடுதீவில் முதலாம் வட்டாரத்தில் இடம்பெற்ற கோரப் படுகொலையின் பின்னர் அவ்வட்டாரத்தில் வாழ்கின்ற பெரும்பாலான மக்கள் அச்சம் காரணமாக இரவு நேரங்களில் பல வீடுகளில் ஒன்று சேர்ந்து தங்கும் நிலைமையே காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் தீவகம் சிவில் சமூகம் அமைப்பினர் இணைந்து இப்படுகொலையுடன் தொடர்புடைய நபரை கைது செய்தனர்.
கோரப் படுகொலை
அனலைதீவை சேர்ந்த சந்தேக நபரையே முல்லைத்தீவு தென்னியன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, தற்போது புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அச்ச நிலை ஓரளவு நீங்கி மக்கள் இரவு நேரத்தில் வழமைபோன்று தத்தமது வீடுகளில் தங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இப்படுகொலையுடன் தொடர்புடைய புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரத்தினைச் ( கேரதீவு) சேர்ந்த நபரொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவரையும் பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam