இலங்கையில் தீவிர பாதுகாப்பு - விதிக்கப்பட்டுள்ள தடை
2026 ஆண்டுக்கான ரி-ருவென்டி உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது போட்டி நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் போட்டிகளை பார்வையிட வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் அதிகாரிகளும் 600 போக்குவரத்து அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய சில விடயங்களில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
விதிக்கப்பட்டுள்ள தடை
அதற்கமைய, பார்வையாளர்கள் பெரிய அளவிலான பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்? சொத்து மதிப்பு குறித்து உலா வரும் தகவல்.. Cineulagam