வடக்கு - கிழக்கில் கரிநாள் பேரணிக்கு எதிராக மகிந்த அணி போர்க்கொடி
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும், நாமல் ராஜபக்ஷவை சி.ஐ.டிக்கும் ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.
சுதந்திரக் காற்று
ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் ஓர் அங்கம்தான் இது. அரசு தமது இயலாமையை மூடிமறைத்துக் கொள்வதற்காகவே ராஜபக்சக்களை இவ்வாறு குறிவைக்கின்றது.

படையினர் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்குச் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது.
இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டிட்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின் கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.
இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால், வடக்கு, கிழக்கில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அங்கு கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டுள்ளது. எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செயலில் காட்ட வேண்டும்." என்றார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam