ஜனாதிபதி தேர்தலை தமிழர் தாயகம் எவ்வாறு எதிர்கொள்வது!

Anura Kumara Dissanayaka P Ariyanethran Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By T.Thibaharan Aug 28, 2024 12:53 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

சிங்கள பௌத்த அரச மேலாதிக்கவாதம் தமிழரின் குடியுரிமைமீறல், மொழியுரிமைமீறல், நிலவுரிமைமீறல் மற்றும் அவர்கள் மீதான பொலிஸ் - இராணுவ ஆதிக்கமென வளர்ந்து நாசிசம் எனப்படும் இனப்படுகொலை இராட்சத தேசியவாதமாக (Monster Nationalism) பெருவளர்ச்சி அடைந்து கட்டமைக்கப்பட்ட இனவழிப்புவாதமாக (Structural Genocide) இன்று முழு அளவிலான பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

இனப்படுகொலையும், அதனடிப்படையிலான ஜனநாயக மீறலுமே இலங்கை அரசியலின் அச்சாணியாகவும், நடுநாயகமாகவும் அமைந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் என்ற இடப் பெயர் 2009 ஆம் ஆண்டில் இருந்து, அரசியல் வரலாற்று அர்த்தத்தில் இனப்படுகொலை என்ற பொருட் பெயராய் மாறிவிட்டது. இலங்கைத்தீவின் ஜனநாயகம் என்பது பொய்யான வரலாற்றின் அடிப்படையிலான சிங்கள இனநாயகத்தால் கருத்தமைப்பும், கட்டமைப்பும் செய்யப்பட்டு அதுவே நடைமுறையாயும் விளங்குகிறது.

இந்தியாவால் நடத்தப்பட்ட இரகசிய கணக்கெடுப்பு: மறுக்கும் உயர்ஸ்தானிகராலயம்

இந்தியாவால் நடத்தப்பட்ட இரகசிய கணக்கெடுப்பு: மறுக்கும் உயர்ஸ்தானிகராலயம்

அரசியல் வரலாறு

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்பது ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள இனநாயகத்தால் கட்டமைப்புச் செய்யப்படுகிறது. இது ஜனநாயக மீறலாகவும் முழு இலங்கைத் தீவிற்குமுரிய அரசியலையும் ஜனநாயகவிரோத அரசியலாகவும் வடிவமைக்கிறது. இன்று இனப்படுகொலையானது வெற்றிவாதத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிவாதம் இலங்கை முழுவதையுமே இராணுவ மயப்படுத்துகிறது. கூடவே தமிழின எதிர்ப்பு வெற்றிவாதத்தைக் கொண்ட சிங்கள பௌத்த அரச இராணுவவாதம் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் ஒடுக்கும் மனப்பாங்கையும், நடைமுறையையும் கொண்டுள்ளது.

ஆதலால் இனப்படுகொலைக் கலாச்சாரத்திலிருந்து இராணுவ வெற்றிவாதம், சிங்கள இனநாயகம், மகாசங்க ஆசீர்வாதத்துடனான சிங்கள பௌத்த மக்கள் ஆணை என்பன இணைந்து வேரும் விழுதும்விட்டு பெரு விருட்சமாய் எழுந்து நிற்கின்றது. மகாசங்கம், இராணுவம், ஆட்சியாளர் (அரசாங்கம்), பொலிஸ் மற்றும் நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு, ராஜதந்திர நிர்வாகக் கட்டமைப்பு என்பன அனைத்தும் தனித்தனியேயும், இணைந்தும் இன அழிப்புக் கலாச்சாரத்தையும், நடைமுறையையும் கொண்ட செயல்ப்பூர்வ அரசாட்சி அங்கங்களாகும்.

ஜனாதிபதி தேர்தலை தமிழர் தாயகம் எவ்வாறு எதிர்கொள்வது! | Presidential Election In Tamil Motherland

அரசியல் யாப்பு, சட்டம், நியாயம், பொதுமனம் என்பன எல்லாம் இவற்றிற்கு கீழ்ப்பட்டவையே ஆகும். இனப்படுகொலையினால் இராணுவம் அடைந்த வெற்றி என்பது தொடர்ந்து தமிழ் மக்களை அழிப்பதற்கான ஒரு மடைதிறப்பாகும். அது அரசியல், இராணுவம், நிர்வாகம், புலனாய்வு, அபிவிருத்தி, குடியேற்றம், சிங்கள மொழியாதிக்கம், சிங்கள பௌத்த மயமாக்கம் என்ற அனைத்து அங்கங்களிற் கூடாகவும் தங்கு தடையின்றி தமிழின அழிப்பை முன்னெடுக்க வழியமைத்துள்ளது.

எனவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழின அழிப்பை முழுஅளவில் நிறைவேற்றி முடிப்பதற்கான ஒர் அனுமதிப்பத்திரமாகவே அமைந்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்குள் பத்தில் ஒன்றிற்கும் குறைவான அளவில் தமிழ் மக்கள் பின்னிணைக்கப்பட்டிருப்பதால் எப்போதும் இப்பேராபத்தை எதிர்கொண்டபடியே தமிழ் மக்களின் தலைவிதி சிதைகிறது.

இத்தகைய அரசியல் வரலாற்று மெய்மையையும், நிகழ்கால யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டே முள்ளிவாய்க்காலிற்குப் பின்னரான தமிழ் அரசியல் நெறிப்படுத்தப் பட்டிருக்க. வேண்டும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை உள்நாட்டுரீதியில் நாடாளுமன்ற விவாதங்களின் மூலமாகவோ, நீதிமன்ற வழக்காடல்களின் மூலமாகவோ, சிங்களத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் மூலமாகவோ, மற்றும் நல்லிணக்க ஒத்துழைப்புக்கள் மூலமாகவோ, தீர்வுகாண முடியாது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்து இற்றை வரையான இலங்கையின் நீண்ட அரசியல் வரலாறு நிரூபித்து நிற்கின்றது.

உள்நாட்டில் கொழும்பை விட்டகன்று இலங்கையின் எல்லையைவிட்டுக் கடல்தாண்டி திம்பு, தாய்லாந்து, ரோக்கியோ, ஒஸ்லோ என நாடுகள் கடந்து, பிராந்தியம் கடந்து, கண்டம் கடந்து, இந்திய இலங்கை ஒப்பந்தம் முதல் சர்வதேச ஒப்பந்தங்களாக நீண்டு இன்று முழு அளவிலான சர்வதேசப் பரிமாணம் பெற்றுவிட்ட தமிழ்த் தேசிய இனப்பிரச்சனையை மீண்டும் கொழும்பிற்குள்ளோ, இலங்கை பாரளுமன்றம் என்ற சிறைக்குள்ளோ அடைத்து, அடக்கி, சுருக்கித் தீர்வுகண்டிட முடியாது பொன்னன் முதல் சம்மந்தன் வரை தோல்வியடைந்துள்ள நாடாளுமன்ற விவாத அரசியலினாலோ, சிங்கள அரசுடனும், சிங்கள அரசாங்கங்களுடனும் 1949ல் இருந்து இன்று வரை ஒட்டி உறவாடிய இணக்க அரசியலினாலோ, விட்டுக் கொடுப்புக்களினாலோ, சமரசங்களினாலோ, ஓடுகாலி அரசியல்களினாலோ தமிழர் இனவழிப்புக்குள்ளானதைத் தடுத்து நிறுத்திட முடியவில்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் வழிநடத்தல் தொடர்பில் சிறீரங்கேஸ்வரன் கேள்வி

தமிழ் மக்களுக்கான அரசியல் வழிநடத்தல் தொடர்பில் சிறீரங்கேஸ்வரன் கேள்வி

  

இணக்க அரசியல் காலகட்டங்கள்

1) 1949 ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டுவரை முறையே பிரதமர்கள் டி.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, சேர்.ஜோன் கொத்தலாவல ஆகியோரின் கீழ் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராக இருந்து இணக்க அரசியல் நடாத்திய எட்டாண்டு காலமும் முதலாவது இணக்க அரசியல் காலகட்டமாக அமைந்தது.இக்கால கட்டத்திற் கண்ட பலன் சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு நிரப்பப்பட்டு கிழக்குத் துரிதமாக சிங்கள மயமாக்கலுக்கு உள்ளானது.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் உத்தியோகபூரவ ஆவணங்களற்ற நிலையில் சாதாரண நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் கதியற்று பெரும் வேதனைகளுக்கும் வலிகளுக்கும் உள்ளானதுடன் அவர்களை இந்தியாவிற்கு நாடுகடத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளையும் அரச இயந்திரம் வெற்றிகரமாய் மேற்கொண்டு வந்தது.

2) பிரதமர் டட்லி சேனநாயக்கவின் கீழ் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி அமைச்சர் பதவியேற்றும் (மு.திருச்செல்வம்), ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உபசபாநாயகர் பதவி பெற்றும் (மு.சிவசிதம்பரம்) 1965 - 1970 வரை தேசிய அரசாங்கம் அமைத்து இணக்க அரசியல் நடாத்தினர். இதனால் கண்ட பலன் டட்லி - செல்வா ஒப்பந்தம் கைவிடப் பட்டமையும், பசுமைப் புரட்சி (Green Revolution) என்ற பெயரில் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டமையுமே ஆகும்.

3) பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், நீலன் திருச்செல்வம் என்போரின் அனுசரணையுடன் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் என்போர் தலைமையில் 1979 - 1983 கறுப்பு ஜூலை வரை இணக்க அரசியல். இதனால் கண்ட பலன் மாயமானான மாவட்ட அபிவிருத்தி சபை எரிந்து சாம்பலானது. கூடவே யாழ் பொது நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது, 1979 ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ் மண்ணில் இற்றை வரையான இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

அத்துடன் கறுப்பு ஜூலையோடு இணக்க அரசியல் என்னும் தமிழ்த்தலைவர்களின் இத்தேனிலவு முடிவுக்கு வந்தது.

4) 2015 - 2020 வரை ரணில் - சிறிசேன அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் அரங்கேறியது. இதன் பலாபலன், அனைத்தும் இலவுகாத்த கிளியாயும், எதிர்மறையாயும் போனமை அனைவருமறிந்ததே. முக்கியமாக இனப்படுகொலையை களத்தில் நிறைவேற்றிய இராணுவத் தலைமைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் எனும் அதியுயர் இராணுவ விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வளங்கப்பட்டது.

மேற்படி அனைத்து வகை இணக்க அரசியல்களும் ஏமாற்றுக்களாயும், தமிழின அழிப்பிற்கான ஏதுக்களாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் எதிரிக்கு எதிரான இடையறாத நேரடிப் போராட்டமே ஒரே வழி. "நெருக்கடி கொடுக்காமல் ஆட்சியாளர்களிடமிருந்நது உரிமைகளைப் பெறமுடியாது" உள்ளும் புறமும் மேற்கொள்ளக்கூடிய நேரடிப் போராட்ட வழிமுறைகளினாலும், சர்வதேச மட்டத்திலான சரியான ராஜதந்திர வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமுமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

பொது வேட்பாளர்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் தமது இயலாமையையும், ஓடுகாலி அரசியலையும், தோல்வியையும் தெளிவாக நிரூபித்து எதிரிக்கு துணைபோவதில் முடிந்தது. சிங்கள ஆட்சியாளர்கள், அவர்களை அண்டிப் பிழைக்கும் சார்புக் கட்சிகள், தமது தனிப்பட்ட சுயநலத்திற்காக எதிரிக்கு துணைபோகும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சியினர் அனைவரும் எதிரணியைச் சேர்ந்தவர்களே.

ஆகவே மாற்று அரசியல் பேசும் சக்திகள் முதலில் கூட்டாக ஒன்று திரளவேண்டும். இவர்கள் அனைவரும் ஆகக்குறைந்தபட்ச உடன்பாட்டின் கீழ் கூடியபட்ச ஐக்கியமாக எதிரிக் கெதிரான பெரும் சக்தியாக மிளிரவேண்டும். எதிரியையும், எதிரியின் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும் என்றால் மாற்று அரசியல் பேசும் சக்திகள் அனைவரும் முதலில் ஒன்று சேர்ந்து ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.

அந்த முடிவினை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தில் செயல்படுகின்ற பல வகைப்பட்ட 96 சிவில் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து 100க்கு மேற்பட்ட உறுப்பினர்பளைக் கொண்ட "தமிழ் மக்கள் பொதுச் சபை" (Tamil people's general assembly) என்ற சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலை தமிழர் தாயகம் எவ்வாறு எதிர்கொள்வது! | Presidential Election In Tamil Motherland

தமிழ் மக்கள் பொதுச் சபை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஒரு களப்பயிற்சியாக, ஆடுகளமாக பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் சொல்லவும், தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், தமிழ் தேசிய அடிக்கட்டுமானங்களை கட்டவும் ஏற்ற வகையில் இந்தத் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ் மக்கள் பொதுச் சபையும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆகியவை இணைந்துயாவரும் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு“ உருவாக்கப்பட்டது. இக்கட்டமைப்பு பா.அரியநேத்திரன் அவர்களை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்துவிட்டனர். இறுதி இலட்சியம் :- தமிழ் மக்களின் இறுதி இலட்சியம் வடக்கு - கிழக்கை மையமாகக் கொண்ட தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஸ்டி தீர்வு.

அதுவே ஈழத்தமிழரின் தேசிய அபிலாசையை குறைந்தபட்சமாவது நிவர்த்தி செய்யும். உடனடிக் கொள்கை :-

• போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான சர்வதேச நீதி விசாரணையையும் முன்னெடுக்க வேண்டும்.

• தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமத ஆக்கிரமிப்பக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• தமிழ் மக்களின் கடல்வளம், நிலவளம், காட்டுவளம், மண்வளம், மூலவளம் என்பன பாதுகாக்கப்பட்டு அவை பொருத்தமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

போராட்ட வழிமுறை :- திம்பு பேச்சுவார்த்தையில் தொடங்கி தாய்லாந்தின் பாங்கொக், யப்பானின் ரோக்கியோ, நோர்வேயின் ஒஸ்லோ என இலங்கைக்கு வெளியே சர்வதேச பரிமாணம் பெற்ற இலங்கையின் இனப்பிரச்சனையை இனியும் வாதாட்டம் மற்றும் வாய்ப் பேச்சுக்களினால் உள்நாட்டுரீதியில் தீர்க்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் போட்டி: ராஜித வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் போட்டி: ராஜித வெளியிட்ட தகவல்

 

உள்நாட்டில் ஜனநாயக ரீதியிலான பல்வேறு வகையிலான நேரடிப் போராட்டங்கள் மற்றும் அமைதிவழிக் கிளர்ச்சி நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுப்பதன் வாயிலாகவும், சர்வதேச ரீதியாக நீதிக்கான கோரிக்கையை வலுப்படுத்துவதன் ஊடாகவும், சர்வதேச பிரசன்னத்துடனுமே ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட முடியும். செல்வா தலைமையில் 1964 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருமலைத் தீர்மானத்தின் படி முஸ்லிம் மக்களுக்கு ஒரு தனிச் சுயாட்சி அலகு வழங்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்குமான அரசியற் திடசித்தத்தையும், அறிவையும், ஆற்றலையும், செயற் திறனையும் கொண்டுள்ள தலைவர்களையே எதிர்கால இத்தேர்தலில் முன்னிலைப்படுத்த வேண்டும்.

• இப்பின்னணியில் சிங்களவர்கள் கையிலெடுத்திருக்கும் தமிழினப் படுகொலை வெற்றிவாத கோட்பாட்டின் எதிர்ப் பக்கமான தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான நீதிவாதத்தையும் அதனோடிணைந்த சர்வதேச நீதி விசாரணையையும் முன்னிறுத்த வேண்டும்.

• சிங்கள இனநாயகம் திரட்டும் மக்கள் ஆணைக்கு பதிலாக தமிழ்த் தேசிய ஜனநாயக மக்கள் ஆணையை முன்னிறுத்த வேண்டும்.

• இன அழிப்புக்கான அங்கீகாரத்தையும், அந்த இன அழிப்பை வெளிநாடுகள் தலையிடாது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசின் இறைமை என்பதற்குள் ஆட்சியாளர்கள் அடக்குகிறார்கள்.

தமிழர்களின் தலையாய பொறுப்பு

எனவே இதற்கு எதிராக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பு என்ற தமிழ் மக்களின் தேசிய இன இறைமையை முன்னிறுத்த வேண்டும்.

அதாவது ஆட்சியாளர்கள் முன்வைக்கும் “அரச இறைமை” என்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் “தேசியயின இறைமை” என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்த வேண்டும் சில தமிழ்த்தலைமைகள் இனப்படுகொலைக்கு எதிரான நீதிவாதத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக.

அது துரதிஸ்டவசமாக இனப்படுகொலை அரசையும், ஆட்சியாளர்களையும், இராணுவத்தையும் காப்பாற்றும் பணியை சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் மனப்பூர்வமாக முன்னெடுத்து பேரினவாத ஆட்சியாளர்களினது சேவகர்களாயும் பாதுகாவலர்களாயும் மாறியுள்ளது. இன்று இனவாத அரசாங்கத்திற்கு உள்நாட்டில் சிங்கள பௌத்தர்களின் பேராதரவு, மகாசங்கத்தின் மேலான ஆதரவு, இராணுவத்தின் பரிபூரண ஆதரவு, கூடவே சிங்கள ஊடகங்களின் வெற்றிவாத ஆதரவு என்பன எல்லாம் இருக்கும் நிலையில் உள்நாட்டில் அவர்கள் மிகப் பலமாக உள்ளார்கள். 

ஆனால், அவர்களுக்குள்ள ஒரே ஒரு சவால் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாகவும், அதன் வழியாக ஏற்படவல்ல சர்வதேச நெருக்கடிதான்.

ஜனாதிபதி தேர்தலை தமிழர் தாயகம் எவ்வாறு எதிர்கொள்வது! | Presidential Election In Tamil Motherland

அதனை எதிர்கொள்ள அவர்களுக்கு தமிழ்த்தலைமைகளின் ஆதரவு அவசியம். இந்நிலையில் ராஜபக்சக்களோடும் ரணிலேடும், சஜித்தோடும் “இணக்க அரசியல்” பேசி பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதாக மீண்டும் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதானது ஏமாற்றும் தந்திரமும், பணம் சேர்க்கும் நோக்கமும், அப்பட்டமான அயோக்கியத்தனமுமாகும். 1977 ஆம் ஆண்டே தமிழ் மக்கள் பிரிந்து செல்வதற்கான தம் மக்களாணையை வழங்கினர்.

அந்த மக்களாணையை நிராகரிக்க எந்தக் கட்சிகளுக்கும், எந்தத் தலைவர்களும் உரிமையில்லை. இலங்கையை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையை அணைத்து, விட்டுக்கொடுத்து நடக்கும் கொள்கையையே இந்தியா கடைப்பிடிக்கிறது.

இதனை புரிந்துகொண்ட இலங்கையரசு இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களை ஒடுக்குவதில் முன்னேறிச் செல்கிறது. தருணங்களுக்கேற்ப "ஈரடி முன்னால் ஓரடி பின்னால்" என்ற நடைமுறையை இலங்கை பின்பற்றி ஒரேவேளையில் இந்தியாவையும், ஈழத் தமிழரையும் தோற்கடிப்பதில் இலங்கையின் இராஜதந்திரம் தொடர்ந்தும் வெற்றியீட்டிச் செல்கிறது.

இந்தியா பொறுத்து இந்திரா - பார்த்தசாரதி அணி (Indra - Parthasarathi Team) பின்பற்றிய கடும்போக்குத்தான் நடைமுறையில் வெற்றிபெறக் கூடியதாய் காணப்பட்டது. ஆனால் அதன்பின் இலங்கை தொடர்பாக இந்திய அரசு கடைப்பிடித்த விட்டுக்கொடுப்பான போக்குகளும், ஒத்துப்போகும் போக்குகளும் தமிழரை நசித்துக் கூடவே இந்தியாவையும் தோற்கடிக்கக் கூடியதாய் அமைந்தன.

இறுதிக்கட்ட போரின் வலிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்: உமா குமரன்

இறுதிக்கட்ட போரின் வலிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்: உமா குமரன்

சிங்கள பெளத்த அரசின் இந்திய எதிர்ப்பு வாதமும் தமிழின எதிர்ப்பு வாதமும் பிழையான, பொய்யான, கற்பனையான வரலாற்றியலால் (Historiography) கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. மகாநாம தேரர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழினப் கொலைகள் சரியானவை என்று நியாயப்படுத்தி தொடர்ந்தும் அது வளர்க்கப்படுகிறது.

இதுவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக சிங்கள மக்களோ, புத்திஜீவிகளோ, பௌத்த பிக்குகளோ, சிங்கள அரசியல் வாதிகளோ ஒரு இரங்கற் செய்தியினைத்தானும் இன்றுவரை வெளியிடவில்லை. 1953 - 1956 வரை பிரரதமராக இருந்த சேர்.ஜோன் கொத்தலாவலை "ஒரு கோப்பைத் தேநீருக்குத் தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கலாம்" என்று கூறியது இன்றுவரை சரியாக இருக்கிறது.

சொத்தை சேகரித்தல், சொத்தைப் பாதுகாத்தல் என்ற சுழற்றி நிலைக்கு ஏற்ப தமிழ்த் தலைவர்களுக்கு அரச ஆட்சியாளர்களின் கரங்கள் தேவைப்படுவதால் நேரடியாகவோ, பக்கத்துணையாகவோ, மறைமுகமாகவோ ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேரவேண்டிய அவசியமுண்டு.

இப்போது தமிழ் மக்களின் தலையாய ஆபத்து டி.எஸ்.சேனநாயக்க தொடக்கி வைத்த சிங்கள குடியேற்றத் திட்டத்தின் மூலம் தமிழர் தாயகம் விழுங்கப்படுவதுதான். இதனைத் தடுக்கவல்ல அரசியலைச் செய்வதே தமிழர்களின் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். தாயகம் இல்லையேல் தேசிய இனமும் இல்லை, சமஸ்டியும் இல்லை, தேசமும் இல்லை. தமிழர் உதிரிச் சிறப்பான்மையினராகி இறுதியில் கரைந்து அழிந்துவிடுவர்.

ஆதலால் இனவாதத்தோடு ஒத்தோடும் தமிழ்த் தலைமைகளையும், சிங்கள ஆட்சியாளர்களையும் எதிர்ப் புள்ளியில் நிறுத்தி புறந்தள்ளிவிட்டு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் வழிநடத்தலில் தமிழ்மக்கள் அனைவரும் சங்கு சின்னத்தின் கீழ் ஓரணியில் நின்று தமிழ் மக்களின் தேசிய ஆணையை முதலில் நிலை நிறுத்த வேண்டும்.

கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மக்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வ வரவேற்பு

கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மக்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வ வரவேற்பு

மக்களை மூச்சுவிட வைத்த தலைவர் ரணில்: அங்கஜன் இராமநாதன் புகழாரம்

மக்களை மூச்சுவிட வைத்த தலைவர் ரணில்: அங்கஜன் இராமநாதன் புகழாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US