கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மக்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வ வரவேற்பு
கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனுக்கு கிளிநொச்சி மக்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வ வரவேற்பை அளித்தனர்.
குறித்த வரவேற்பு நிகழ்வு நேற்றையதினம் (27.08.2024) இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, பளை நகருக்கு வருகை தந்த அரியநேந்திரன், தமிழ் பாரம்பரிய பறை மற்றும் மங்கள வாத்திய இசையோடு வரவேற்கப்பட்டார்.
பிரசாரக் கூட்டம்
அதனைத் தொடர்ந்து பளை பஸ் நிலையத்தில் பிரசார நடவடிக்கையை அரியநேத்திரன் ஆரம்பித்தார்.
அங்கிருந்து இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகர் சென்று இரணைமடுச் சந்தியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
பளையில் நடைபெற்ற பிரசாரத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 50 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
