கில்மிஷாவின் பாடலுக்கு கை தட்டி மகிழ்ந்த ஜனாதிபதி
இந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இசை போட்டி நிகழ்ச்சி
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இறுதிச் சுற்று வரை முன்னேறிய கில்மிஷாவுக்கு வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளிலும், தென்னிந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடத்திலும் ஆதரவு அதிகரித்திருந்தது.
அத்துடன், இறுதிச் சுற்றில் கில்மிஷா வெற்றிப் பெற வேண்டும் என்ற தமது அவாவை தமிழ் மக்கள் தங்களது சமூக ஊடங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
இதற்கு முன்னர் தென்னிந்திய தமிழ் ஊடகங்களில் நடத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்கள் பங்கு பற்றியிருந்த போதிலும், வெற்றிப்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை.
எனினும், முதன்முறையாக தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.
இதற்கு இலங்கையில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
