அமெரிக்காவில் தீர்ப்பை வாசிக்கும் நீதிபதி மீது தாக்குதல்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
Man attacks Las Vegas judge at sentencing ? pic.twitter.com/nMaJUVapW3
— Daily Loud (@DailyLoud) January 3, 2024
நீதிபதி மீது தாக்குதல்
எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேரி கே ஹோல்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |