செங்கடல் பகுதியில் நிலைகொள்ள தயாராகும் இலங்கை கடற்படை
ஈரான் சார்பு ஹவுதி போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (04.01.204) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செங்கடலில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து சர்வதேச கப்பல் நிறுவனங்களிடையே அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து
இந்த தாக்குதல்களின் மூலம், ஹமாஸக்கு ஆதரவாக இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாக ஹவுதி போராளிகள் கூறுகின்றனர்.
எனினும் செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, விநியோகம் நேரம் தாமதமாகி வருகிறது.
செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதை எதிர்கொள்ள கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி வந்தால் சரக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
