‘நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா’- இரசாயன ஆயுத தயாரிப்பை மறுத்த உக்ரைன் ஜனாதிபதி
கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
தான் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, தங்கள் நிலத்தில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
ரஷ்யா இதனை மறுத்ததுடன், இதற்குப் பதிலளித்து உக்ரைன் ஜனாதிபதி காணொளியொன்றினையும் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
நான் ஒரு நாட்டின் தலைவன், இரண்டு குழந்தைகளுக்கு தந்தை, எனது நிலத்தில் இரசாயன ஆயுதங்களோ, பேரழிவை ஏற்படுத்தும் வேறு ஆயுதங்களோ உருவாக்கப்படவில்லை. ரஷ்யாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் ரஷ்யா பிறர்மீது குற்றம் சாட்டுவதை கவனித்தாலே போதும். அமைதியான ரஷ்யா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.
இப்போது இரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறுகிறார்கள். உலகத்திற்கு என்ன நடக்கிறது என்று தெரியும். எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், ரஷ்யா மேலும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பெறும்’ என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை! உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியது: ரஷ்யா குற்றச்சாட்டு
புடினை கைவிட்ட நட்பு நாடு: பகையை சம்பாதித்துக்கொண்டுள்ள ரஷ்யா