அநுரவின் வடக்கு வருகை தொடர்பில் அதிகார பூர்வ அழைப்பு கிடைக்கவில்லை! சத்தியலிங்கம் எம்.பி கவலை
ஜனாதிபதியின் வடக்கு வருகை தொடர்பில் அதிகார பூர்வ அழைப்பு எதுவும் எமக்கு விடுக்கப்படவில்லை என தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வடமாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும், அவர்களை காணாமல் ஆக்கியவர்களாகவும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.
ஜனாதிபதியின் வடக்கு வருகை
ஆனால், இந்த தலைமுறை ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தை பார்க்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூறவரவில்லை.
இளம் துடிப்பான நல்ல விடயங்களை பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக அவர் இருக்கிறார். எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது.
நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா, இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
ஜனாதிபதியின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிந்ததுடன், அதிகார பூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan