வட்ஸ்அப் தொடர்பாக இலங்கையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
சமூக வலைத்தளங்கள் மற்றும் பல செயலிகள் தொடர்பில் அந்தந்த நிறுவனங்களால் இலங்கைக்கு சில முடிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தின் இறுதியில் வட்ஸ்அப் செயலியில் பரிமாறப்படுகின்ற செய்திகளை தாமே தங்கள் பாதுகாப்பில் ஆய்வு செய்வதற்கான அனுமதி இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தின் அடுத்த பரிணாமமாக இதைப் பார்க்கலாம் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார்.
வட்ஸ்அப், முகநூல் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்கள்.இதனால் அமெரிக்காவின் தலை அசையாமல் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெற மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,