இறக்குமதி வரிகளைக் குறைக்க முடிவு செய்துள்ள இரு நாடுகள்
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பிற்குப் பிறகு, இரு நாடுகளும் இறக்குமதி வரிகளைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கனடா பிரதமர் ஒருவர் சீனா சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கனோலா எண்ணெய் மீதான வரியை 85%-லிருந்து 15% ஆகக் குறைக்க சீனா சம்மதித்துள்ளது.
இறக்குமதி வரி
சீன மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 100% வரியைக் குறைத்து, 6.1% என்ற சலுகை வரியை விதிக்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும், ஒரு ஆண்டிற்கு 49,000 வாகனங்கள் மட்டுமே இந்த வரிச்சலுகையின் கீழ் அனுமதிக்கப்படும்.
கடல் உணவுகளான நண்டுகள் மற்றும் பட்டாணி போன்றவற்றின் மீதான வரியும் குறைக்கப்பட உள்ளது.
கடும் மோதல்
இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கணிக்க முடியாத வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரி உயர்வுகளால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்கவே, கனடா இப்போது சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.

இது ஒரு "புதிய உலக ஒழுங்கிற்கான தொடக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018-ல் ஹூவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. தற்போது மார்க் கார்னியின் வருகை, அந்த உறவைச் சீரமைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.