இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சஜித்துடன் கலந்துரையாடல்
தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(16.1.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளின் உறவு
இதன்போது, ஜூலி சாங்கின் பதவிக் காலத்தில், இரு நாடுகளின் உறவுகளைப் பல்வேறு துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மிக அண்மைக் காலங்களில் இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா ஊடாகப் பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam