சிறையில் உள்ளவர்கள் தொடர்பில் வீரவன்ச முன்வைத்த குற்றச்சாட்டு
திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உட்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று(16.01.2026) திருகோணமலை விளக்கமறியல் சாலையில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்களை பார்வையிட்ட பின்னரே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ ஆதரவாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் பௌத்த அடையாளங்கள்: கலகம தேரரின் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு
குற்றச்சாட்டு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களம் மீது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது அவர் தந்திரமாக விலகிவிட்டார். ஆனால், திணைக்களம் தனித்து விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.