ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை “தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்” என்று ஈரான்,எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தலைமை தளபதியின் ஆலோசகர் எப்ராஹிம் ஜப்பாரி (Ebrahim Jabbari) அரசுத் தொலைக்காட்சியில் பேசியபோது வெளியிடப்பட்டது.
எண்ணெய் ஏற்றுமதி
ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளதாக கூறிய அவர், கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பகுதிக்கு அவர்கள் வரக் கூடாது. அவர்கள் நிச்சயமாக எங்களிடமிருந்து கடுமையான பதிலைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கர்கள் “இந்தப் பகுதியின் எண்ணெய்க்காக தாகம் கொண்டவர்கள்” என்றும், ஈரான் “இந்தப் பகுதியில் உள்ள அவர்களின் எண்ணெய் குழாய்களைத் தாக்கும் இப்பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது” என்றும் ஜப்பாரி கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam