மத்திய கிழக்கிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்காவின் அவசர அறிவிப்பு: சூடுபிடிக்கும் நிலவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க பிரஜைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறிவுறுத்தல்
அதன்படி, பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக இதுவரை எந்த கடுமையான தாக்குதல்களும் தொடங்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
ஈரானை தாக்குவதற்கான உத்தரவு தெஹ்ரானின் அணு ஏவுகணை திட்டத்தை முறியடிப்பதற்காகவே என்று அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.

மோதல்கள் நீடிக்கும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் குறித்து வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்த மோதல்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நீடிக்கும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam