முல்லைத்தீவில் இரு வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் நடைபெறும் இருவேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி (26.05.2024) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அன்று காலை 9.30 மணிக்கு புதுக்குடியிப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி செற்படுத்தப்படுகின்ற சிக்கலில்லா இல்லத்தின் முழு உரிமையை அனைவருக்கும் உரித்தாக்கும் உன்னத நோக்கில் உதயமான உருமய (உரித்து) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலவச காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
புனர்வாழ்வு மருத்துவமனை
இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை, காணி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அழைப்பின் பெயரில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கா.காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து அன்று மாலை மாங்குளம் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள வடக்கின் மிகப்பிரமாண்டமான மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனையினையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |