மின்சார சபையின் விசேட அறிவித்தல்
புதிய இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளை மிக விரைவாக அறிவிக்கக்கூடிய புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அதிகளவானோர் முயற்சி செய்வதால் பலருக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிகளவான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 3 நாட்களில் 36,900 மின் கம்ப சேதங்கள் பதிவாகியுள்ளன.
அவசர அழைப்புக்கள்
இதன் காரணமாக 300,000இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் வழங்குவது தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பாதிப்புக்களை சீராக்குவதற்காக ஊழியர்கள், 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மின்சாரம் தடைபட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது.
CEB has reported over 36,900 breakdowns resulting in power interruptions to more than 300,000 consumers in the last 3 days due to inclement weather. Additional service staff has been assigned to attend the breakdowns and the CEB management & service staff are working 24 hours to…
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 23, 2024
அதேவேளை, மின்சார பாவனையாளர்கள், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |