இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஐந்து பேர் வைத்தியசாலையில்....!
அநுராதபுரம் - பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
திறப்பனை பொலிஸார் விசாரணை
அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த மோட்டார் வாகனம், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த மோட்டார் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து இடம்பெற்ற இடம் வளைவான பகுதி என்பதால், அநுராதபுரத்திலிருந்து வந்த மோட்டார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் வலது பக்கமாகச் சென்று மற்றைய மோட்டார் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் அநுராதபுரத்திலிருந்து பயணித்த மோட்டார் வாகன சாரதி உட்பட அதில் பயணித்த நால்வரும், மற்றைய மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரும் அடங்கலாக 5 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தினால் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.