சர்ச்சையை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேது அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.
முன்னாள் சிறைச்சாலை ஆணையர் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒரு நிரந்தர ஆணையரை நியமிப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.
முன்னெடுக்கப்படும் விசாரணைகள்..
மாறாக, அந்தப் பணியைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்றும், அதன்படி அந்த நோக்கத்திற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் ஆணையாளர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, முன்னாள் ஆணையாளர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், ஒரு புதிய ஆணையாளiu நியமிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அவர் எப்படியாவது விடுவிக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.