புத்தகாயாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்த பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள மிகப் புனிதமான நான்கு இடங்களில் ஒன்றாக புத்தகயா காணப்படுவதோடு 2002 ஆம் ஆண்டு புத்தகயா மகாவிகாரை உலக மரபுரிமையாக யுனெஸ்கோவினால் பிரகடனம் செய்யப்பட்டது.
ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம்
இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின் விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.













நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
