அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது
இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார்.
அரச சேவையில் இருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும், தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கும் குவோ வோரண்டோ ரிட்(Writ of Quo Warranto)வகையிலான உத்தரவைக் கோரி இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
குவோ வொரண்டோ(Writ of Quo Warranto)என்பது, பொது நிறுவன பதவியை வகிக்கும் ஒருவரின் உரிமையை சவால் செய்யப் பயன்படுத்தப்படும் பொதுவான சட்ட தீர்வாகும்.
அந்த வகையில், அர்ச்சுனா, சுகாதார அமைச்சகத்தில் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
