சுரேஷ் சாலே கைது விவகாரம்! விரைவில் வெளிவரவுள்ள பல சூத்திரதாரிகளின் பெயர்கள்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து இன்னும் பல சூத்திரதாரிகளின் பெயர்கள் வெளிவர உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் லங்காசிறிக்கு தெரிவித்துள்ளார்.
அத்தோடு,ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட்டவுடன் அரசியல் இலாபத்தை பெற்றவர்கள் மிகவும் கவலை அடைந்து சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் இலாபத்தை பெறுவதற்காக தான் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்
இதேபோன்று,ராஜபக்சக்களை மீ்ண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஆடிய நாடகம்,அஜந்தன் என்ற தமிழ் இளைஞன் மீது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீண்டும் வருகின்றது என்று குற்றச்சாட்டு செய்த விடயம் எல்லாம் ஒன்றுக்கொன்று சரியாக வந்து கொண்டு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் வேறு ஒரு சதி இருக்கின்றது என்பதை நாம் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையிலே சுரேஷ் சாலேவின் கைது இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுரேஷ் சாலேயின் கைதிற்கு அலி சப்ரி கண்டனம் தெரிவித்தமை நிசாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதலின் சதித்திட்டத்தின் பயனானிகள் யார் என்று முழு உலகத்திற்குமே தெரியும்.மேலும், பயனாளிகள் உரியவர்கள் பிடிபடும் போது கண்டனம் தெரிவிப்பது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri