சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு
2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 17 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்றுமுன் தினம் (31.07.2026) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி செய்வதற்கு தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri