இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர் கைது
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொறிவைத்து பிடிபட்ட சம்பவம்
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட பொறிமுறையைப் பயன்படுத்தி குறித்த உத்தியோகத்தர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே அவரை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பல அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri