பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம்

Sri Lanka Police SLPP Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Sep 29, 2026 04:06 AM GMT
Report

வடக்கு, கிழக்கு மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான அவசரகாலச் சட்டத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மாறாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் மூலம் பொதுமக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் இராணுவத்துக்குப் பொலிஸாருக்கு ஒத்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. தொலவத்த சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தடைச் சட்டம்

"பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாகவும், குறிப்பாக போர்க் காலத்திலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. போர் நிறைவடைந்த பின்னர், இந்தச் சட்டத்துக்குப் பதிலாக வேறு சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம் | Police Powers Granted To The Military

தற்போதைய அரசும் எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து, அதனை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதில் திருத்தங்களை மேற்கொள்கின்றது.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை இராணுவத்துக்கும் வழங்கும் நிலை உருவாகின்றது.

சாதாரண சூழ்நிலையில் பொதுமக்களுடன் தொடர்புபடுதல், அவர்களைச் சோதனையிடுதல், அவர்கள் எங்கிருந்து வருகின்றனர், எங்கு செல்கின்றனர் என்பதைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும்.

அவசரகாலச் சட்டம் நடைமுறை

வடக்கு, கிழக்கு மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக பொதுமக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாட்டைக் குறைப்பதும், அவசரகாலச் சட்டத்தின் பயன்பாட்டைக் குறைப்பதும் உள்ளது.

ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்தத்தின் மூலம் அதற்கு மாறான நிலைமையே உருவாக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையிலும் இராணுவத்துக்கு இவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதைப் போன்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம் | Police Powers Granted To The Military

இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் போராட்டம் நடத்துவதற்கான உரிமை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உருவாகும்.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகமும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

22 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நளிந்த பதிலடி

22 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நளிந்த பதிலடி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US