22 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நளிந்த பதிலடி

Sri Lanka Parliament Sri Lanka Constitutional Sri Lanka Government 22nd Amendment Nalinda Jayatissa
By Rakesh Sep 29, 2026 03:51 AM GMT
Report

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

"சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், உயர்நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவாதத்தின் பின்னர் தேவையான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்கச் சமமான வாய்ப்பளிக்கப்பட்டது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதி 

22ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தெளிவான அரசியல் காரணங்களை முன்வைக்க முடியாமல், எதிர்க்கட்சியினர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

சுயாதீன நீதித்துறையின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

22 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நளிந்த பதிலடி | 22Nd Amentment Sri Lanka

22ஆவது திருத்தத்தின் பின்னர் எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவு மேலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தெளிவான அரசியல் கோஷங்கள் எதுவும் இன்றி நபர்களை மட்டும் ஒன்றிணைத்துச் செல்வதால் ஏற்படும் குழப்ப நிலையே இன்று எதிர்க்கட்சியில் காணப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கும் 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கின்றது.

அதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவதற்குத் தனித்துவமான புதிய சட்ட நடவடிக்கைகளை முன்வைக்க அரசு காய்நகர்த்தி வருகின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயரும் சந்தர்ப்பங்களில், அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், அரசு நேரடியாகத் தலையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.

22 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நளிந்த பதிலடி | 22Nd Amentment Sri Lanka

தற்போதைய நிலவரப்படி, சர்வதேச எரிபொருள் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு மக்களுக்குத் தேவையான சில நிவாரணங்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அரசு விசேட திட்டமொன்றை அமல்படுத்தி வருகின்றது.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகத் தலைவர்களைக் கைது செய்யும் பணிகளும், உள்நாட்டில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு பாதாள உலகக் குழுவுக்கோ அல்லது நபருக்கோ அரசின் எந்தவொரு பாதுகாப்பும் கிடைக்காது. நாட்டின் பாதாள உலகக் குற்றங்களை முற்றாக ஒழித்து அமைதியை ஏற்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்"  என குறிப்பிட்டுள்ளார். 

அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மகிந்தவின் மனைவி! மாறுவேடத்தில் சுற்றித்திரிவதால் சர்ச்சை

அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மகிந்தவின் மனைவி! மாறுவேடத்தில் சுற்றித்திரிவதால் சர்ச்சை

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US