பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
மட்டக்களப்பில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸிற்கு பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.
2008ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய இருவரும் திறந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய சிஐடியினர் பிள்ளையானை நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாத பாதுகாப்பு காரணங்களை முன்வைத்ததுடன் இந்த கொவைச் சம்பவங்களுடன் இராணுவ தகவல் பிரிவு மற்றும் சிவில்பாதுகாப்பு குழுக்கள் தொடர்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் சிஐடியினர் சமர்ப்பணம் செய்தனர்.
இதேவேளை பிள்ளையான் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி பிள்ளையானை மட்டு சிறைச்சாலையில் மாற்றுமாறு கடந்த வழக்கு விசாரணையின்போது முன்வைத்ததை கோரிக்கையை தொடர்பாக மீண்டும் முன்வைத்தார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த வழக்கை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேரையம் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்
முதலாம் இணைப்பு
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (24.07.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் இணையவழி மூலமாக வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள செய்யப்படடார். ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், “பிள்ளையானை வெலிசரை கடற்படை முகாமில் எப்படி வைத்திருக்க முடியும்? எனவே இந்த வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்” என அவரின் சட்டத்தரணிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக தகவல் - பவன்
YOU MAY LIKE THIS VIDEO