எரிபொருள் விலையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று வகை எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 95 ரக ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் ரூ.341.00 ஆகும்.
92 ரக ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 299 ஆக உள்ளது.
லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 283 ஆக உள்ளது.
ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 313 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
செப்டெம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation - CPC) அறிவித்துள்ளது.
விலை திருத்தம்
இதற்கமைய, இறுதியாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் படி, வெள்ளை டீசல் லீட்டர் 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 305 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 341 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 185 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 9 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
