சிறை செல்வதை தடுக்கவே நாமல் சத்தம் போடுகிறார்! அரசின் பகிரங்கம்
பிரதேச சபையில் கூட உறுப்பினராக முடியாமல் பட்டியலில் நாடாளுமன்ற வந்த நாமல் ராஜபக்ச பாரிய சத்தம் போடுகிறார்.
ஒரு சிறு குழுவை நாடு முழுதும் கூட்டி சென்று தான் சிறை செல்வதற்கு எதிராக மக்கள் ஆரதவை பெற்றுக் கொள்வது எவ்வாறு என சிந்திக்கிறார் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோசன் தெரிவித்துள்ளார்.
சிறுது காலத்தில் நாமலுக்கு நடக்கபோவது?
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாமல் ராஜபக்ச செய்த வேலைகளுக்கு நீதிநிலைநாட்டப்படும் போது அவர் எங்கிருப்பார் என அனைவருக்கும் தெரியவரும்.
அப்போது பார்ப்போம் அவர் ஜனாதிபதி ஆகிறாரா எங்கிருப்பார் என்று. நாமலுக்கு தெரியும் தனக்கு ஜனாதிபதியாக முடியாது என.மேலும் அவருடன் இருப்போருக்கும் இது நன்றாக தெரியும்.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் டேசி ஆச்சியின் வழக்கு,பாதாள குழுவினருடன் வைத்துள்ள தொடர்பு போன்றன நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது,அந்த கும்பலே சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவரும் என குறிப்பிட்டிருந்தார்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam