துபாயில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம்! வெளிவரும் சர்ச்சைகள்
உகண்டாவில் மாத்திரம் அல்ல, ராஜபக்சர்கள் துபாயிலும் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உகண்டாவில் மாத்திரம் அல்ல, துபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருக்கும் பணம்
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சில விசாரணைகள் நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உகண்டாவை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். துபாய் மற்றும் பிற நாடுகளில் உள்ள பணம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாமல் ராஜபக்ச துபாயில் வைத்திருந்த பணம் தொடர்பில் யாரும் பேசுவதை நாங்கள் காணவில்லை. எனினும், அது தொடர்பான விசாரணைகள் தொடர்நது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் வெளிவரும் உண்மைகளுக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam