திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: மகாநாயக்க தேரரின் கருத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம்..
நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு ஒன்றுக்கு எமக்கு ஒன்றும் சொல்ல முடியாது.அது சட்டவிரோதமான செயற்பாடாகும்.நீதிபதி இது தொடர்பில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களை கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும்.
அதுதான் நீதிமன்ற நடைமுறையும் சட்டமும் ஆகும் என மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திலித் ஜயவீர நேற்று (10.01.2026) கண்டி தலதா மாளிகைக்கு சென்று மகாநாயக்க தேரர்களை சந்தித்து சிறையில் வைக்கப்பட்டிருக்கும் பிக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடுமையான விமர்சனம்
அச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மகாநாயக்க தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த மகாநாயக்க தேரர், திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை அல்லது அந்த நடவடிக்கை தவறு என்றால் அவர்கள் பௌத்த பிக்குகளாக இருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவிப்பதோடு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அது தான் சட்டமாகும். எனக்கு இது தொடர்பில் அதிகம் தெரியாது.நீங்கள் சொன்ன காரணங்களை வைத்து நோக்கினால்,பிக்குகள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையை நாங்கள் கண்டிக்கிறோம்.

அது தொடர்பிலான சட்டத்திட்டங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களுக்கு நாம் கவலை தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri