2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்கும் : ஃபிபா தலைவர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரான் அணி நிச்சயமாகப் பங்கேற்கும் என ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய விளையாட்டுத் துறை அமைச்சு போரைக் காரணம் காட்டித் தங்கள் அணி பங்கேற்காது எனத் தெரிவித்திருந்த நிலையிலும், வீரர்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்ஃபான்டினோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயிற்சி பெற்று வரும் ஈரான் வீரர்கள்
ஈரான் அணி "நிச்சயமாக" அமெரிக்காவிற்கு வந்து விளையாடும் என்றும், விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் தனது ஆரம்ப சுற்றுப் போட்டிகளை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சீட்டில் ஆகிய நகரங்களில் விளையாடவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கள் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்றுமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை ஃபிபா நிராகரித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள தற்காலிக போர்நிறுத்தம் ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் அமைதியான சூழல் ஏற்படும் என நம்புவதாக இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
துருக்கியில் பயிற்சி பெற்று வரும் ஈரான் வீரர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ள அவர், வீரர்கள் விளையாடவே விரும்புவதாகவும், உலக நாடுகளுக்கு இடையே பாலமாகச் செயல்படுவதே ஃபிபாவின் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri