ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதன் பிற்பாடு கடந்த ஒன்பது மாதங்களாக குறித்த பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அதிபர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கை
தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் புதிய அதிபர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி சிரமப்படும் தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு விரைவாக புதிய அதிபரை அதிகாரிகள் நியமிக்கும்படி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் வெளிபாடா யாழ் சிறுவனின் படுகொலை...! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam