வெளிநாட்டவர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. கந்தசாமி விநாயகமூர்த்தி பகிரங்கம்
இந்தக்கட்சி வெளிநாட்டவர்களுக்கு எதிரான கட்சி என எப்படி கூற முடியும் என்று சுதந்திர ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நிலைப்பாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திர ஜனநாயக கட்சி வெளிநாட்டவர்கள் எதிரான கட்சி அல்ல. வெளிநாட்டவர்கள் இந்தக்கட்சியில் இணையும் பட்சத்தில் அவர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கும் கட்சியாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில் முனைவோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

அந்தவகையில், புதிய தொழில் ஒன்றை துவங்குபவர்களுக்கு எமது கட்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உதவிகளையும், அவர்களை ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஆனாலும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அதிகமான வரி விதிப்பு பார்க்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஜனநாயக கட்சி தொடர்பில் வேறு என்னென்ன விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல் News Lankasri
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri