வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Saudi Arabia
By Thevanthan Nov 08, 2026 08:54 AM GMT
Report

போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தச் செய்து, பெண்ணொருவர் குழுவாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றுமுன் தினம்(06.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் திருட்டு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து, தனது தோழியின் வீட்டிற்கு பொதியொன்றைக் கையளிப்பதற்காக கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பிற்கு வாடகை வாகனத்தில் பயணம் செய்துவிட்டு, மீண்டும் அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் வழியில் இவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு போதை ஏற்படுத்தும் வகையிலான பானமொன்று வழங்கப்பட்டு, அதன் பின்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம் | Woman Who Arrived In Sri Lanka Abroad Positive

அச்சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த பணம் மற்றும் ரூ. 1,323,750.00 பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களையும் குறித்த நபர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஆள்நடமாட்டமற்ற இடமொன்றில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் மூலம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளன. இதனையடுத்து, மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியான மகளிர் உப பொலிஸ் பரிசோதகர் மதுஷிகா உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

சாரதியின் மோசமான செயல்

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி, 33 வயதுடைய அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் என்றும், சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பணியாற்றி நிலையில், கடந்த 2026.11.04 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம் | Woman Who Arrived In Sri Lanka Abroad Positive

இலங்கை வந்த அவர், தன்னுடன் சவூதி அரேபியாவில் பணியாற்றிய கவிதா எனும் தமிழ் பெண்ணின் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை, புதுக்குடியிருப்பிலுள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு சென்று ஒப்படைக்குமாறு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொழும்பு - கோட்டை பகுதிக்கு வந்தபோது, வெளிநாட்டில் இருக்கும் கவிதா என்பவர் கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பிற்கு வருவதற்காக வாடகை வாகனமொன்றை ஏற்பாடு செய்து, அவர் இருந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நண்பியின் வீட்டிற்கு சென்ற வேளையில்...

குறித்த வாகனத்தில் தமிழ் இனத்தைச் சேர்ந்த சாரதியொருவர் இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த தனது தனிப்பட்ட பொருட்களையும், தோழியின் பொதியையும் எடுத்துக்கொண்டு 2026..11..04 ஆம் திகதி சுமார் 11.00 மணியளவில் சாரதியுடன் புதுக்குடியிருப்பு நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

அவ்வாறு பயணித்துக்கொண்டிருந்தபோது, நீர்கொழும்பு பகுதியில் சாரதி தனது தனிப்பட்ட தேவையொன்றைக் காரணம் காட்டி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 2026.11.05 ஆம் திகதி அதிகாலை சுமார் 5 மணியளவில் கவிதாவின் வீட்டைச் சென்றடைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம் | Woman Who Arrived In Sri Lanka Abroad Positive

குறித்த வீடு மற்றும் அதற்குச் செல்லும் பாதையை வாடகை வாகனத்தின் சாரதியே காட்டியுள்ளார்.

அந்த வீட்டில் தோழியின் தாய், கணவர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குறித்த பொதியை தோழியின் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் சாரதியுடன் அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துள்ளார்.

அவ்வாறு பயணித்துக்கொண்டிருந்தபோது, புதுக்குடியிருப்பு நகரத்திற்கு அண்மையில் உள்ள பாலமொன்றிற்கு அருகிலிருந்து ஆண் நபர்கள் இருவர் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளனர். அவ்விருவரும் வாகனத்தில் ஏறியபோது, தாங்கள் கொண்டு வந்திருந்த பானப் போத்தலொன்றை பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் குடிப்பதற்காக வழங்கியுள்ளனர்.

அதனை அருந்திய பின்னர் அவருக்குச் சிறிதளவு போதை ஏற்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வு மற்றும் கொள்ளைச் சம்பவம்

அதன் பின்னர் குறித்த குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உள்வீதியொன்றிலுள்ள ஆள்நடமாட்டமற்ற வீடொன்றிற்கு அழைத்துச் சென்றே இதுபோன்ற மோசமான செயலைச் செய்துள்ளனர்.

அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக எவ்வித நினைவும் இல்லை என்றும், மீண்டும் நினைவு திரும்பியபோது தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் - சதித்திட்டம் விசாரணையில் அம்பலம் | Woman Who Arrived In Sri Lanka Abroad Positive

அந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அவரது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றைக் குறித்த நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் விரலில் அணிந்திருந்த மோதிரம் ஆகிய இரண்டும் மாத்திரம் எஞ்சியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ஆள்நடமாட்டமற்ற இடமொன்றில் விழுந்து கிடந்தபோது, அவ்வழியாகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சில பொதுமக்கள் இணைந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் மூலம் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தைப் பார்வையிடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியின் வீட்டைக் கண்டறிந்து, அங்குள்ளவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் அடையாளம் காட்டும் இடங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசேட குற்றப் பிரிவு (விசேட தகவல் பிரிவு) உத்தியோகத்தர்களும் தகவல்களைத் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

சவுதி அரேபியாவில் 14 வருடங்களாக காணாமல் போயுள்ள இலங்கைப் பெண்

சவுதி அரேபியாவில் 14 வருடங்களாக காணாமல் போயுள்ள இலங்கைப் பெண்

யாழில் பொதுமக்களை வழிமறித்து பணம் பறிக்கும் மர்ம நபர் - பொலிஸாரின் அசமந்த போக்கால் தொடரும் அட்டூழியம்

யாழில் பொதுமக்களை வழிமறித்து பணம் பறிக்கும் மர்ம நபர் - பொலிஸாரின் அசமந்த போக்கால் தொடரும் அட்டூழியம்

YOU MAY LIKE THIS VIDEO




மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US