புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் வெளிபாடா யாழ் சிறுவனின் படுகொலை...! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுதந்திரமாக வீதியில் நடந்து செல்லும் பொழுது, வாகனத்தில் சென்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம்.
மேலும், வாகனம் நிறுத்தாமல் சென்றால் வாகனத்தை நிறுத்த முயற்சி எடுக்காமல் ஓட்டுநரை கொல்ல முயற்சி செய்வது விடுத்து, கொலைச் செய்வதை நியாயப்படுத்தலாமா?
இவ்வகையான செயல்களை ஆதரிக்கும் வகையில் தான் அநுர அரசாங்கம், புதிய பயங்கரவாதச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று யாழ் சிறுவனின் கொலைத் தொடர்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னென்ன விடயங்களை பேசியிருக்கிறார் என்பதை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.