கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11.02.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதான நான்கு பௌத்த பிக்குகள் உட்பட 10 நபர்களையும் இன்று (11.02.2026)திருகோணமலை நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri