கொழும்பை நோக்கி அரசியலை நகர்த்தும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம்!
தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் கொழும்பை நோக்கி அரசியலை நகர்த்துவதாக அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கொழும்பில் இருக்கக்கூடிய அனைவருக்கும் இது ஒரு நல்ல அரசியல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் நல்ல பொருளாதார கட்டமைப்பு வளர்கின்றது.ஆனால் கிராமப்புற மக்களுக்கு பொருளாதார கட்டமைப்பு இன்னும் சென்றடையவில்லை.
ஆகவே, கிராம மட்டத்தில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து பொருளாதாரத்தை உயர்வடையச் செய்தால் இனவாதப் பேச்சுக்கள் இல்லாமல் போய்விடும்.
மேலும், இனவாதமும்,மதவாதமும் இந்த நாட்டின் சாபக்கேடு என அவர் தெரிவித்துள்ளார்.