மீண்டும் கைது செய்யப்படவுள்ள ரணில்.! காரணமும் காலமும் வெளியானது..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கைது செய்யப்படும் சாத்தியம் உண்டு என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் கைதாகும் ரணில்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதில் எவ்வித அடிப்படைத் தன்மையும் இல்லை.
சட்ட ஆலோசனைகளுக்காக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் பட்டலந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதேபோன்று மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்திலும் கைது செய்யப்படலாம்.
166 இலட்சம் மொசடி வெளிச்சத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். இதற்காக கைது செய்யப்பட்டமை எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கலாக அமையாது.
இது அரசியல் பழிவாங்கலா..
விசாரணைகள் ஊடாக தெளிவான முறையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் பழிவாங்கலாக இருக்குமாயின் அதற்கான முன்னேற்பாடுகள் அல்லது ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும். இதுவே கடந்தகால அனுபவங்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேர்மையாக கூறுவதாயின் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவ்வாறானதொரு குற்றச்சாட்டு உள்ளதை மாத்திரமே நாங்கள் அறிந்திருந்தோம்.
வாக்குமூலம் அளிக்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமையை அறிந்திருந்தோம். இதற்குப் பிறகும் அரசியல் பழிவாங்கல்களுக்கான சூழலை அரசாங்கம் முன்னெடுத்ததாக கூற முடியுமா என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
